Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எல்.நௌபர்
திருகோணமலை மாவட்டத்திலுள்ள வெருகல், குச்சவெளி, மூதூர் ஆகிய பகுதிகளிலுள்ள களப்புப் பகுதிகளை சரியாக அடையாளப்படுத்துவதற்கு, மீன்பிடித் திணைக்களத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 960 தூண்கள் களப்புப் பகுதியில் நடப்படவுள்ளன.
“கடல் உயிரினங்கள் தங்கி வாழ்வதற்கு களப்பு முக்கியமானது. முன்னர் இருந்த களப்பின் அளவும் தற்போதைய களப்பின் அளவும் குறைவடைந்துள்ளது. எனவே, களப்பின் அளவைப் பாதுகாப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என, திருகோணமலை மாவட்ட மீன்பிடித் திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் திலக் செனரத் பண்டார கூறினார்.
அதனடிப்படையில், கரையோர களப்புப் பிரதேசத்தைச் சரியாக அடையாளப்படுத்தி, பாதுகாப்பது பற்றிய கலந்துரையாடல், மூதூர் பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் எம்.முபாரக் தலைமையில், இன்று (22) நடைபெற்றது.
இதில் திருகோணமலை மாவட்ட மீன்பிடி உத்தியோகத்தர், கிராம சேவையாளர்கள், சிவில் மாதுகாப்பு உத்தியோகத்தர்கள், ஏனைய அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago