2025 மே 02, வெள்ளிக்கிழமை

காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 12 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்ச நகர் பகுதியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  

கல்மெடியாவ தெற்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான பியதிஸ்ஸ பண்டார  (வயது 39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை விறகு எடுக்கச் சென்றவர் மூன்று நாட்களாகியும் வீடு திரும்பாததால்  அவரை தேடிச் சென்ற வேளையிலேயே ஈச்சக்குளத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து நேற்று (11)  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

மூன்று நாட்கள் கடந்தைமையால் உயிரிழந்தவரின் உடல் உறுப்புக்கள் சிதைந்து காணப்பட்டதுடன், சில பகுதிகள் காட்டு மிருகங்களால் வேட்டையாடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக தம்பலகாமம் பொலிஸார், கந்தளாய் திடீர் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்டோர் சடலம் காணப்படும் இடத்துக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .