Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2020 மார்ச் 22 , பி.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஆர்.எம்.றிபாஸ்
நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டு வருகின்றது. அந்தவகையில் திருகோணமலை மாவட்டத்திலும் ஊரடங்கு சட்டத்தின் காரணமாக பல பகுதிகள் முற்றாக ஸ்தம்பித்துள்ளன.
கிண்ணியா பிரதேசத்தில் கடைகள் அடைக்கப்பட்டு, பிரதான வீதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிப் போய் காணப்படுகின்றது.
கிண்ணியா பகுதிகளிலுள்ள பிரதான வீதிகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளை மேற்கொண்டு வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அரசின் சட்டத்துக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருவதையும் காணக் கூடியதாக உள்ளது.
நாளாந்தம் தொழில் செய்கின்ற மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்ய முடியாது உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கூலித் தொழில் செய்து நாளாந்தம் உணவுப் பொருள்கள் வாங்கிச் சாப்பிடும் மக்கள் தங்கள் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாது உள்ளதாகவும் அன்றாடம் கடல் தொழிலில் ஈடுபடும் மக்களும் கடல் தொழிலுக்கு செல்ல முடியாததால் வருமானமின்றிக் கஷ்டத்தின் மத்தியில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025