Princiya Dixci / 2022 மே 04 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர்
திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள கிராம சேவகர்கள், இன்று (04) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக கிண்ணியா பகுதியில் உள்ள 31 கிராம சேவகர் பிரிவு அலுவலகங்களும் மூடப்பட்டிருந்ததுடன், மக்களுக்கான சேவையும் ஸ்தம்பிதமடைந்தது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கோரியும் இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற கிராம உத்தியோகத்தர்களின் தொழிற் சங்கத்துக்கு வலுசேர்க்கும் முகமாகவும் இந்த சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
32 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
32 minute ago
53 minute ago