Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
யூ.எல். மப்றூக் / 2017 ஜூலை 22 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை - திருகோணமலை பாதையில், சேவையில் ஈடுபடும் பஸ்களின் தொழில் நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில், மேலதிக பஸ்களுக்கு, பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான அனுமதிப்பத்திரங்கள் முறையற்ற ரீதியில் வழங்கப்பட்டிருக்குமாயின், அது தொடர்பில் நடைவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உறுதியளித்தார்.
தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், கிழக்கு மாகாண ஆளுநரை, திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில், புதன்கிழமை சந்தித்தனர்.
இதன்போது, தொழில் ரீதியாக தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முறையிட்டபோதே, மேற்படி உறுதிமொழியை ஆளுநர் வழங்கினார்.
கல்முனை - திருகோணமலை போக்குவரத்துப் பாதையில் தனியாருக்கு சொந்தமான 21 பஸ்வண்டிகளும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 14 பஸ் வண்டிகளுமாக, மொத்தம் 35 பஸ் வண்டிகள் மிக நீண்டகாலமாக சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த பஸ்களுக்கு போதிய வருமானம் இல்லாத நிலையில், இதே பாதையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பொருட்டு, 2 சொகுசு பஸ்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் கீழுள்ள, கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், மேற்படி பஸ்களுக்குமான அனுமதியை வழங்கியுள்ளார்.
இதன் காரணமாக, தமது பஸ்களுக்குரிய வருமானம் - மேலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என, குறித்த பஸ்களின் உரிமையாளர்கள், தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட பலருக்கு, எழுத்து மூலம் புகார் தெரிவித்திருந்தனர்.
ஆயினும், பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வுகள இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில், கல்முனை - திருகோணமலை வீதியில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்காக, மேலும் 5 பஸ்களுக்கு, கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையினர் புதன்கிழமை அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பஸ் உரிமையாளர்கள் சார்பாக, தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், புதன்கிழமை, கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து, தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் முறையிட்டதோடு, இது தொடர்பில் எழுத்து மூலமான கடிதமொன்றினையும் ஆளுநரிடம் கையளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
2 hours ago