Editorial / 2019 ஒக்டோபர் 06 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்
திருகோணமலை - நிலாவெளி, 6 ஆம் கட்டை, பெரியகுளம் பகுதியில் ஒரு தொகை கேரள கஞ்சாவும் போதை மாத்திரைகளையும் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் , திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரால் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அங்கு சென்று குறித்த சந்தேக நபரை சோதனை செய்த போது, அவரிடமிருந்து 1,200 மில்லிக் கிராம் கேரள கஞ்சாவும் 09 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ன.
மேலதிக விசாரணைக்காக திருகோணமலை தலைமையகப் பொலிஸாரிடம் சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago