2025 மே 06, செவ்வாய்க்கிழமை

குளவிக் கூடுகளால் மாணவர்களுக்கு ஆபத்து

ஒலுமுதீன் கியாஸ்   / 2018 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா, மகாமாறு பிரதேசத்தில் அமைந்துள்ள, நீர் வழங்கல் வடிகான் அமைப்புச் சபைக்குச்  சொந்தமான நீர்த் தாங்கியில் குளவிக் கூடுகள் அதிகமாக காணப்படுவதால், இந்த நீர்த்தாங்கிக்கு அருகிலுள்ள, கிண்ணியா  அலிகார்  மகா வித்தியாலயப் பாடசாலை மாணவர்களுக்கு, இது எந்த நேரத்திலும் ஆபத்தாக அமையலாமென,  பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்தக் கூடுகளில் இருக்கின்ற குளவிகள் கலைந்தால் பாடசாலை வகுப்பறைக் கட்டட பகுதிக்குள்ளும் வெளியிலும்   சுற்றித்திரிவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதனால், பாதுகாப்பான முறையில் குளவிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X