Editorial / 2024 ஜனவரி 24 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் புதன்கிழமை (24) இடம்பெற்ற மோதலின் காரணமாக பெண்ணொருவர் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 28 தொடக்கம் 58 வயதுக்கு இடைப்பட்ட நபர்களே காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மிரிஸ்வெவ பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த சேனைப்பயிர்ச் செய்கைக்குள் மாடுகள் புகுந்து நாசமாக்கியுள்ளதாக சேனைப்பயிர் செய்கையாளர், மாட்டின் உரிமையாளரிடம் நஷ்டஈடு கோரியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் பெண்ணொருவர் உட்பட ஆறுபேர் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், அப்பெண் உட்பட வயோதிபர் ஒருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026