எப். முபாரக் / 2018 ஒக்டோபர் 23 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறைச்சாலைகளில் நூலகங்களை அமைத்து, கைதிகளின் வாசிப்பு, கல்வி ஆற்றலை மேம்படுத்த எண்ணியுள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் (புனர்வாழ்வு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
திருகோணமலை சிறைச்சாலை வளாகத்தில், நேற்று (22) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் குற்றவாளிகளாகச் சிறையில் வருகின்ற குற்றவாளிகளுக்கு, ஆன்மிகம் தொடர்பான வகுப்புகளையும் கருத்தரங்குகளையும் மேற்கொள்வதுடன், மனதுக்கான போதனை நடவடிக்கைகளையும் கல்வி அறிவிப்புகளையும் மேற்கொண்டு, மேம்பாடடையச் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
அத்துடன், நூலகங்கள் ஊடாக சிறைக் கைதிகளின் செயற்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
9 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
4 hours ago
4 hours ago