Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 ஏப்ரல் 30 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பகல் காணமல் போனதாகக் கூறப்படும் 8 மற்றும் 10 வயது சிறுமிகள் இருவரையும், சம்பூர் பொலிஸாரும் பொதுமக்களும் கண்டுபிடித்து வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணியளவில் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சிறுமிகள் இருவரும் நேற்று பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்லாமல் இலங்கைத்துறை முகத்துவாரத்திலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மாலையாகியும் பிள்ளைகள் இருவரும் வீடு திரும்பாததையடுத்து, பெற்றோர் சம்பூர் பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து சம்பூர் பொலிஸாரும் பொதுமக்களும் தேடுதல் மேற்கொண்டு, சீனன்வெளி பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து சிறுமிகள் இருவரையும் பாதுகாப்பான முறையில் மீட்டெடுத்துள்ளனர்.
பாடசாலைக்கும் உறவினர்களின் வீட்டுக்கும் இடையிலான தூரம் 4 கிலோ மீற்றருக்கும் அதிகமாகும். இவர்கள் இருவரும் விளையாடி விளையாடிச் சென்றதனால் இரவாகியுள்ளது. சிறுமிகள் தனியாக செல்வதை அவதானித்த சீனன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், இவ்விரு சிறுமிகளையும் பாதுகாப்பான முறையில் வீட்டுக்கு அழைத்துச் சென்று சம்பூர் பொலிஸாரிடம் தகவலை வழங்கி ஒப்படைத்ததாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு, குறித்த இரண்டு சிறுமிகளுக்கும் பொலிஸார் அறிவுரை வழங்கியதோடு இருவருக்கும் சிறுதொகை பணத்தையும் அன்பளிப்பாக வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago