2025 மே 15, வியாழக்கிழமை

காணியை அளக்க வந்தவர்களால் பதற்றம்

Princiya Dixci   / 2017 மே 05 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

திருகோணமலை, அநுராதபுரம் சந்தியில் தனியாரின் பராமரிப்பில் உள்ள காணியை, மாகாண அதிகாரிகளின் உதவியுடன் அபகரிக்க முயற்சிப்பதாக உரிமையாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் நேற்றுக் காலை 9.30 இலிருந்து ஈடுபட்டனர். 

குறித்த பகுதியிலுள்ள சுமார் 12 பேர்ச் காணியை அமைச்சரொருவரின் உதவியுடன் வேறு நபர்கள் கைப்பற்ற முயற்சிப்பதாக, காணியில் நீண்டகாலமாக பராமரித்துவரும் தற்காலிக உரிமையாளரான பாலையூற்றைச் சேர்ந்த ராஜா நிமலராஜா தெரிவித்தார்.  

கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து காணியை அளக்க வந்தவர்களைக் குறித்தபகுதி மக்கள், காணியை அளக்க விட மறுத்ததனால், அப்பகுதில் நேற்றுப் பதற்றமான நிலைமை ஏற்பட்டது. 

அதிகாரிகளுடன் பொலிஸாரும் வருகைதந்திருந்தனர்.  

குறித்த காணி நீதிமன்றத் தீர்ப்புக்கு இணக்கத் தமக்குச் சொந்தமானது என்றும் தமது பராமரிப்பில் உள்ளதென்றும் உரிமையாளர், நீதிமன்றக் கட்டளையைக் காட்டி வாதிட்டு, தவறான முறையில் அளக்க முற்படுவததை அனுமதிக்க முடியாது என, பொலிஸாருக்கு விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .