Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2017 மே 05 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்ஆனந்தம், அப்துல்சலாம் யாசீம்
“கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதியை, தேசிய முகாமைத்துவ திணைக்களம் வழங்கியுள்ளது” என, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் நேற்று, தெரிவித்தார்.
இதனடிப்படையில் கிழக்கு மாகாண பாடசாலைகளிலுள்ள 4,784 வெற்றிடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்,
“பட்டதாரிகளுக்கு முன்னுரிமையளித்து, வெற்றிடங்களுக்குரிய அனைத்து ஆளணிகளையும் உள்வாங்குவதற்கான முழுமையான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், வழங்கப்பட்டுள்ள ஆவணங்களின் பிரகாரம், விரைவில் இந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
பட்டதாரிகளுடன் சென்று அவர்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்காமல், அதற்கும் மேலாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து இன்று பட்டதாரிகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வேறு அரச தொழில்களில் ஈடுபடும் பட்டதாரிகள், ஆசிரியர் நியமனத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்படும் போது, அவற்றுக்கு விண்ணப்பிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இதன்மூலம் வேலைவாய்யப்பின்றி தொழிலுக்காக போராடும் பட்டதாரிகளுக்கு, அநீதிகள் ஏற்படாமல் தடுக்க முடியும்” என்றார்.
அத்துடன், இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான நிதியை, விரைவில் பெற்றுக்கொள்வது தொடர்பான விடயங்களை, எதிர்வரும் சனிக்கிழமை ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள சந்திப்பின் போது கலந்துரையாடவுள்ளதாக அவர் கூறினார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
03 Jul 2025