Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
தீஷான் அஹமட் / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூதூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தில், டெங்கு பரவும் அபாயமுள்ள பகுதிகளில், இன்று (03) காலை புகை விசிறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
மூதூர் பொதுச் சுகாதாரப் பணிமனையின் ஊழியர்கள் இதனை முன்னெடுத்தனர். இதன்போது வீட்டுச் சூழல், வடிகான்கள் போன்றவற்றில் புகை விசிறப்பட்டது.
இந்த வருடத்தில் இதுவரையில் மூதூர் பொதுச் சுகாதாரப் பணிமனைப் பிரிவில் 220க்கும்மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனரெனவும் தற்போது தோப்பூரில் டெங்கு நோயின் தாக்கம் வெகுவாக அதிகரித்து வருவதாகவும் மூதூர் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .