2025 மே 15, வியாழக்கிழமை

தங்கச் சங்கிலியை பிடுங்கிய நபர் கைது

George   / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை, அக்போபுர பகுதியில் கடைக்குச் சென்ற பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை பிடுங்கிச் சென்ற சந்தேக நபரை நேற்று (20) அக்கோபுர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் 19 வயதுடைய கந்நலாய், ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

சந்தேகநபர், ஒன்றரை பவுன் நிறைவுடைய தங்கச் சங்கிலியை பிடுங்கிச் செல்லும் போது, பிரதேச இளைஞர்களின் உதவியுடன் துரத்தி பிடிக்கப்படதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரை, கந்தலாய் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21) முன்னிலைப்படுத்த அக்கோபுர பொலிஸாரால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .