2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

‘தமிழர்களின் காணிகள் பறிபோவதை ஏற்க முடியாது’

Princiya Dixci   / 2022 மார்ச் 16 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத், ஹஸ்பர்

இந்திய இலங்கை அரசாங்கத்தின் மூலம், சம்பூர் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள சூரிய மின் சக்தி திட்டத்தின் ஊடாக தமிழ் மக்களின் காணிகள் பறிபோகுமா என்ற பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதான  ரின்கோ சேவ் அமைப்பின் தலைவர் எஸ் எச்.கிரிசாந்த குமார் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள ஊடக இல்லத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே, இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “இந்தியாவின் அரசியல் உள் நோக்கம் தான் என்ன எனத் தெரியவில்லை. சிறுபான்மை மக்களுடைய காணி அபகரிப்பு ஒரு போதும் இத் திட்டத்துக்காக இடம்பெறக்கூடாது.

“2015 இல் அனல் மின் நிலையம் இதே பகுதியில் அமையவுள்ளதை மக்கள் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டது. மீண்டும் இவ்வாறு தமிழ் மக்களுடைய காணிகளை அபகரிப்பதை நிறுத்த வேண்டும்.

“அன்றாடத் தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் 200 வருடங்களுக்கும் மேலான பழங்குடி மக்கள் என பல சமூகத்தவர்கள் வாழ்ந்து வரும் கிராமமே திருகோணமலை துறைமுகத்தை அண்டிய பகுதியில் உள்ள சம்பூர்.

“எனவே, தமிழ் மக்களுடைய காணி இத் திட்டத்தின் ஊடாக அபகரிக்காமல் செயற்பட வேண்டும். இதனை அரசாங்கம் தமிழ் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X