2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Freelancer   / 2022 ஒக்டோபர் 20 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மனையாவெளி பிரதேசத்தில் உள்ள யாட் அப்ரோஜ் வீதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவரை கைது செய்ததாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 500 வெள்ளை நிற போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தார்.

விற்பனை செய்யும் நோக்கத்துடன் குறித்த நபர் போதை மாத்திரைகளுடன் நடமாடிய வேளையில் துறைமுக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பில் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
கைது செய்யப்பட்டவரையும் கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளையும் நாளை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .