Editorial / 2020 ஏப்ரல் 27 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை மாவட்டத்தின், பதவிசிறிபுர பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டுள்ளாரென, பதவிசிறிபுர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு இணங்காணப்பட்டவர் பதவிசிறிபுர - 10 கொலனியைச் சேர்ந்த 28 வயதுடைய கடற்படைச் சிப்பாய் எனவும் தெரியவருகின்றது.
வெலிசற கடற்படை முகாமில் கடமையாற்றி வந்தவர் எனவும் இவரது மாதிரிகள், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில் இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பதவிசிறிபுர சுகாதார வைத்திய அதிகாரி எரங்க குறுசிங்க தெரிவித்தார்.
அத்துடன், இந்நோயாளியுடன் தொடர்புடைய மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .