Princiya Dixci / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.றனீஸ், ஏ.எம்.கீத், அ.அச்சுதன், எப்.முபாரக்
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட சமன் தர்சன பாண்டிகோராள, தமது கடமைகளை உத்தியோகபூர்வமான மாவட்டச் செயலகத்தில் இன்று (26) பொறுப்பேற்றார்.
இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்த இவர், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையேற்க முன்னர் 2013ஆம் ஆண்டு தொடக்கம் தென்மாகாண முதலமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.
இந்த நிகழ்வில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எம்.ஏ.அனஸ், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, தென் மாகாண ஆளுநரின் செயலாளர் திலேக்கா குடாச்சி, கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்) எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
8 minute ago
11 minute ago
27 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
27 minute ago
35 minute ago