2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

திருமலை நகர சபையின் புதிய உப தலைவர் தெரிவு

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார், அ.அச்சுதன்

திருகோணமலை நகர சபையின் புதிய உப தலைவராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கடலூர் வட்டார உறுப்பினர் காளிராஜா கோகுல்ராஜ், இன்று (03) தெரிவுசெய்யப்பட்டார்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் தலைமையில் நகர சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்ற இந்தத் தெரிவுக்கு 15 உறுப்பினர்கள் ஆதரவளித்தனர்.

ஏற்கெனவே உப தலைவராக இருந்த சே.சிறிஸ்கந்தராஜா பதவியில் இருந்து விலகியதன் காரணத்தால், தமிழரசு கட்சியின் தலைமைப் பீடம் ஓர் இளைஞருக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கடந்த நகராட்சி மன்ற ஆட்சியில் உறுப்பினராக இருந்த சிரேஷ்டத் தன்மையுடன் இளைஞர் என்ற அடிப்படையில் இவர் கட்சியால் ஏக மனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .