Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார், ஒலுமுதீன் கியாஸ், அப்துல்சலாம் யாசீம்
தாயக உரிமைக்காக 1975 முதல் பேராடிய தமது கட்சியின் தோழர்களை ஒருங்கமைத்து, ஈரோஸ் கட்சியை மீண்டும் மீளாளுமை பெறச்செய்துள்ளதாக, ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) கிழக்கு மாகாணத்தின் இணைச் செயலாளர் இரா.இராஜேந்திரா தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர், தமிழ் மக்கள் ஆதரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு, சம காலத்திலே நலிந்து காணப்படுவதாகவும், கட்சியில் உள்ளவர்களைச் சுயமாக சிந்திக்க விடாமல் செய்வதாலேயே பலர் வெளியே வந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
ஈரோஸின் மீளாளுகைப் பொதுச் சபைக் கூட்டம், மூதூர் கிழக்கு, கூனித்தீவில், நேற்று (28) மாலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்ந்து தேசியத்துக்கான குரலை உறுதியாக ஒலிக்க விடுமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தாம் இன்று தமது அமைப்பை மீள ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஆயினும், கடந்த பல தேர்தல்களில், தமது கட்சியினர், பல தோழர்களை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைத்து, நாடாளுமன்றம், மாகாண சபைகளில் வெற்றி பெறச் செய்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்தே, தாம் செயற்பட்டுக் கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், இன்று, தமது கட்சியில் உள்ளவர்களைச் சுயமாகச் செயற்படுத்த விடாமல் கட்டுப்படுத்தும் த.தே.கூவின் போக்கின் காரணமாகவே, மூன்றாவது அணியாக வெளியில் வந்து தாம் செயற்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்த அவர், தமது செயற்பாடுகள், தேர்தலை மய்யப்படுத்தியதாகவோ அல்லது பட்டம் - பதவிகளை மய்யப்படுத்தியதாகவோ இல்லாது இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
"ஆரம்ப காலத்தில், ஈரோஸ் அமைப்பு எங்களை எந்த வகையில் பயிற்றுவித்ததோ, மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகளை அடி மட்டத்தில் சென்று தீர்க்க முனையும் செயற்பாட்டையே நாம் செய்யப்போகின்றோம்" என்றும் அவர் மேலும் உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago