2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தேசிய அரசு தீர்வாகாது

Princiya Dixci   / 2022 ஏப்ரல் 05 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

கட்சி பேதங்களுக்கப்பால் நாடு முழுவதும் நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு இடைக்கால அரசோ, தேசிய அரசோ தீர்வாகாது என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம் மஹ்தி தெரிவித்துள்ளார்.

இன்று (05) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “அரசியல்வாதிகள், மாணவர்கள், பொதுமக்கள் என சகல தரப்பினரும் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க முடியாத நிலையில், அரச எதிர்ப்பு நடவடிக்கைகளில் இரவு - பகல் பாராது மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

“இந்தப் போராட்டக் காரர்களை திருப்திப்படுத்தும் நோக்கில், மத்திய வங்கி ஆளுநர் உட்பட அமைச்சர்களும் பதவி விலகி, இடைக்கால அரசாங்கத்தை அல்லது தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதியின் முயற்சி நடைபெறுகின்றது.

“ஆனாலும், நாட்டு மக்களோ ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உட்பட அனைவரும் பதவி விலகுவதோடு, தேர்தல் ஒன்றின் மூலம் ஊழல்வாதிகள், சந்தர்ப்பவாதிகள், கடும்போக்கு வாதிகள் இல்லாத சிறந்த பொருளாதார, சிந்தனை வாதிகளை உள்ளடக்கிய புதிய அரசாங்கம் ஒன்றையே எதிர்பார்க்கிறார்கள். 

“கடந்த ஆட்சிக்காலங்களில் நடந்தேறிய ஊழல்களுக்கு எதிராக மிகத் தீவிரமான விசாரணைகளை நடத்தி, அவர்களால் கொள்ளையிடப்பட்ட அனைத்து சொத்துகளையும் பரிமுதல் செய்து, நாட்டின் தேசிய சொத்துகளாக்கக் கூடியதாக புதிய அரசாங்கமாக அமைய வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .