2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் இடாப்பு பெறுவதில் சிரமம்

Niroshini   / 2015 நவம்பர் 21 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் தேர்தல் இடாப்புக்கள்  பெறுவதில் சிரமங்கள் ஏற்படுவதாக கல்வியியற் கல்லூரி விண்ணப்பத்தாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போது நாடு முழுவதிலும் உள்ள கல்வியியற் கல்லூரிகளில் புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக விண்ணப்பத்தாரிகளுக்கு நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன.

இந் நேர்முகப் பரீட்சைகளின்போது  தேர்தல் இடாப்பு கொண்டு வருமாறு விண்ணப்பத்தாரிகளிடம் கோரப்பட்டுள்ளது.

எனினும், திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர் ஒருவர் இல்லாத காரணத்தினால் உடனடியாக தேர்தல் இடாப்பு தர முடியாதென அங்கு கூறப்படுவதாகவும் விண்ணப்பத்தாரிகளினால் கூறப்படுகின்றது.

இதனால், இந்த நேர்முகப் பரீட்சைக்கு செல்லும் பல மாணவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .