Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 27 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கொவிட் 19 தொற்று நோயை வெற்றிகரமாக ஒழித்த அரசாங்கத்தினது திட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், நாட்டின் பொருளாதாரத் திட்டத்தில் சரிவு ஏற்படுகிறது என்று கூறுவதாகவும் அவ்வாறு எதுவும் ஏற்படாதெனவும், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.
சுகாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதில் உளவுத்துறை சமூகம் பெரும் பங்கைக் கொண்டுள்ளது என்று ஆளுனர் கூறினார்.
ஆளுநர் செயலகத்தில் நேற்று (26) பிற்பகல் நடைபெற்ற அதிகாரிகளுடனான சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில், “கட்சி அரசியலைப் பொருட்படுத்தாமல், பல விடயங்களை நிர்வகிக்க முடிந்தது. ஜனாதிபதி, சுகாதாரம், பாதுகாப்புப் படையினரால் தான் நாங்கள் அதை முறையாக நிர்வகித்துள்ளோம்.
“நாட்டில் யாரும் பசியால் இறக்க அனுமதிக்கப்படவில்லை. அனைத்து சவால்களும் இருந்தபோதிலும், மக்களின் வாழ்க்கைச் செலவை அதிகரிக்காமல் இருக்க ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
“பல அதிகாரிகள் இதற்காக இரவு, பகலாக உழைத்தனர். இதை நாங்கள் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. ஒரு மாகாணமாக எங்களால் முடிந்த அனைத்து ஆதரவையும் அரசாங்கத்துக்கு வழங்குவோம் ”என்றார்.
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago