Freelancer / 2022 ஜூன் 28 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை வினாயகபுரம் பகுதியில் கும்பல் ஒன்று வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் பெற்றோலை திருடும் காட்சி ஒன்று அங்கிருந்த சிசிரிவி பாதுகாப்பு கமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.
நான்குபேரைக் கொண்ட குழு ஒன்றில் மூன்றுபேர் வீதிகளில் காவல் பணிகளில் ஈடுபட ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை திருடுகின்ற சம்பவம் வினாயகபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற இன்றைய சூழலில் பலர் எரிபொருளை பதுக்கும் நடவடிக்கைகளிலும், அதிகமான விலைக்கு விற்பனை செய்கின்ற நடவடிக்கைகளிலும், தரித்து நிற்கின்ற வாகனங்களில் எரிபொருளை திருடுகின்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.
குறிப்பாக போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள இளைஞர்கள் இதுபோன்ற திருட்டுச் சம்பவத்தில் அதிகம் ஈடுபட்டுவருவதாக தெரிய வருகின்றது.
எனவே மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025