2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

பத்தாவது ஆண்டு நினைவேந்தல்...

Janu   / 2025 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

விழுது நிறுவனத்தின் ஸ்தாபகர் தலைவியும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்வேறு அரசு சாரா நிறுவனங்களை தோற்றுவித்தவருமான அமரர் சாந்தி சச்சிதானந்தமுடைய பத்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாசம் அமரா பெண் தலைமை தாங்கும் குடும்பத்தின் ஒன்றியம் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பெண்கள் அமைப்பினுடைய பிரதிநிதிகள் ஊடகவியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வின் போது அமரர் சாந்தி சத்யானந்தனுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி நினைவுப் பேருரைகளும் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து சம காலத்தில் அரசியலில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றதுடன் இக் கலந்துரையாடலில் உள்ளூராட்சி மன்ற தேர்தலிலே போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 வடமலை ராஜ்குமார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .