தீஷான் அஹமட் / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - தோப்பூர் ஸல்மா மகளிர் வித்தியால அதிபர் எஸ்.தாயூன் தலைமையிலான பாடசாலை அபிவிருத்திச் சங்க குழுவினர், பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்பை, கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (15) மாலை சந்தித்து, பாடசாலை அபிவிருத்தி தொடர்பாகக் கலந்துரையாடினர்.
ஸல்மா மகளிர் வித்தியாலயத்தில் காணப்படும் கட்டட, ஆளணிப் பற்றாக்குறை தொடர்பாக இதன்போது முக்கியமாக ஆராயப்பட்டன.
இதனையடுத்து, பிரதியமைச்சர் தான் பாடசாலைக்கு விஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்து உரிய தீர்வுகளை பெற்றுத்தருவதாக பாடசாலை நிர்வாகத்தினரிடம் உறுதியளித்தார்.
இச்சந்திப்பில், பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.அனீஸ், மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.எஸ்.எம்.றிபாஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
9 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago