Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜூன் 27 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, ஹொரவப்;பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகல்கடப் பகுதியில் பெண்ணொருவர், பெக்கோ இயந்திரத்துக்குள் சிக்குண்டு திங்கட்கிழமை (26) மரணமடைந்துள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.
வாகல்கட டி -1 பகுதியைச் சேர்ந்த ஜீவனி குமாரி சந்ரதாஷ (வயது 37) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
மேற்படி பகுதியில் சீன நிறுவனமொன்றால், யான்ஓயா குளக்கட்டு நிர்மாணப்பணி முன்னெடுக்கப்படுகின்றது.
இங்கு கடமையாற்றி வந்த இப்பெண், பெக்கோ இயந்திரத்தால் போடப்பட்டுக்கொண்டிருந்த மண்ணிலிருந்து மரத்தின் வேர்களை அகற்றிக்கொண்டிருந்த வேளையிலேயே பெக்கோ இயந்திரத்துக்குள் சிக்குண்டுள்ளார்.
இதில் காயமடைந்த இப்பெண், உடனடியாக டி -4 பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, பெக்கோ இயந்திரச் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago