2025 டிசெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

போராட்டம், 22 ஆவது நாளாகவும் நீடிப்பு...

Janu   / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, முத்து நகர் விவசாயிகள் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டம்  22 ஆவது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக புதன்கிழமை (08) முன்னெடுக்கப்பட்டது.

தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக அபகரிக்கப்பட்டதையடுத்து தொடர் போராட்டத்தில் தீர்வு கிடைக்கும் வரை ஈடுபட்டு வருகின்றனர்.

”வேண்டாம், வேண்டாம் பொய் வாக்குறுதி”, ”திருகோணமலையின் நிலங்களையும் வளங்களையும் சூரையாடுவதை நிறுத்து”, ”எங்களை வாழ விடு”, ”விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு”, ”அரசே நிறுவனங்களை வைத்து 352 விவசாயிகளை வீதிக்கு இறக்காதே” போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு இவ் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் குறித்த விவசாயிகள் குதித்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கும் போது பிரதமரின் பிரதிநிதி ஒருவரான ரொசான் எம்.பி தலைமையில் இங்கு கூறியதாவது:

விவசாயிகளின் விபரங்களை திரட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஒக்டோபர் 20 வரை கால அவகாசம் தாருங்கள் எனவும் கூறியுள்ளனர். ஆனால், எமக்கு நம்பிக்கை இல்லை கம்பனிகளிடமிருந்து நஷ்ட ஈட்டு பெற்றுத் தருவதாக கூறினர். மேலும், கிராம சேவகர் திரட்டும் தகவல் போன்றவற்றை வைத்து பார்த்தால் பொய்யானதே எனவே, உத்தியோகபூர்வமாக அறிவித்து எமது நிலத்தை விவசாயிகளாகிய எங்களுக்கு தாருங்கள் எனவும் தெரிவித்தனர்.

ஏ.எச்.ஹஸ்பர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X