2025 மே 15, வியாழக்கிழமை

புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2017 மே 04 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வித்தியாலயத்தில் சுமார் 253 மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில், 6 ஆசிரியர்களே உள்ளனர். இந்த வித்தியாலயத்துக்கு இன்னும் 9 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் எனக் கூறி அவ்வித்தியாலயத்தில் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த (2) செவ்வாய்க்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள், அன்று முதல் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பாடசாலை வெறிச்சோடிக் காணப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .