Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
'சிறுவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்கான மத நல்லிணக்க மன்றம்' திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் இன்று புதன்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வேள்ட்விஷன் சர்வதேச உதவி நிறுவனங்களின் அனுசரணையுடன், வெருகல் மற்றும் சேருவில பிரதேச செயலகப் பிரிவுகளை இணைத்து இந்த மன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக வெருகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.
வெருகல் மற்றும் சேருவில பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆண்கள் 206 பேரும் பெண்கள் 138 பேருமாக மொத்தம் 344 மாற்றுத்திறனாளிகள் உள்ளதாக வேள்ட்விஷன் நிறுவனத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் இம்மானுவேல் பிரகாஸ்குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சமூக சேவைகள் அமைச்சின் அதிகாரியும் வளவாளருமான சார்ள்ஸ் ராஜ்குமார், வேள்ட்விஷன் நிறுவன கொழும்புப் பணிமனை இணைப்பாளர் ஜோஹ்ன் தேவதாஸன், அதன் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் இம்மானுவேல் பிரகாஸ்குமார், வெருகல் உதவிப் பிரதேச செயலாளர் எம்.கே.எம்.முபாறக் உட்பட மத அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலக அதிகாரிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

7 minute ago
35 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
35 minute ago
57 minute ago
1 hours ago