Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Administrator / 2016 செப்டெம்பர் 24 , மு.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
போலி வெளிநாட்டு முகவர் நிலையத்தினை நடத்திச் சென்றார் என்ற சந்தேகத்தின் பெயரில் கடந்த வியாழக்கிழமை (22) கைதுசெய்யப்பட்ட சந்தேகநபருக்கு, கந்தளாய் நீதவான் நீதிமன்ற நீதவான் துஸித தம்மிக, 1 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையிலும் பத்தாயிரம் ரூபாய் பணப்பிணையிலும் விடுதலை செய்துள்ளார்.
திருகோணமலை, முள்ளிப்பொத்தானைப் பிரதேசத்தில் வியாழக்கிழமை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் கைது செய்யப்பட்டு தம்பலகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
சந்தேகநபர், இப்பகுதியில் வீடொன்றில் போலி வெளிநாட்டு முகவர் நிலையமொன்றை நடத்திச் சென்றுள்ளார். இவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கடவுச்சீட்டுக்கள் 3, வீஸா தொடர்பிலான போலி ஆவணங்கள் மற்றும் போலி வைத்தியஅறிக்கை என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபரை, நேற்று வெள்ளிக்கிழமை (23) கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியிருந்த போது சந்தேகநபர் தமது குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்தே நீதவான் பிணையில் விடுதலை செய்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago