2025 மே 05, திங்கட்கிழமை

மயானத்தில் மது; நால்வர் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கிழக்கு மாகாண சபைக்கு பின்னால் உள்ள மயானத்தில், மது அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் நால்வரை, இன்று (28) கைதுசெய்துள்ளதாக, துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை இந்து மயானத்துக்குள் நுழைந்து, அதற்குள் கட்டப்பட்டிருந்த கட்டடங்களில் இருந்து கொண்டு மது அருந்திக் கொண்டிருப்பதாக, பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, அங்கு விரைந்த பொலிஸார், இளைஞர்களைக் கைதுசெய்ததாகத் தெரிவித்தனர்.

குறித்த நான்கு இளைஞர்களும், திருகோணமலை கிரீன் வீதியைச் சேர்ந்த 22 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதுடன், இவ்வாறான செயற்பாடுகளில் மற்றைய இளைஞர்கள் நடக்கக் கூடாது என்பதற்காக அவர்களுக்குத் தெளிவுபடுத்தி வருவதுடன், கைதுசெய்யப்பட்டவர்களை, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், துறைமுகப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X