Mayu / 2026 ஏப்ரல் 29 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்டம், திரியாய் மருதன்குடா பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) இரவு புகுந்த காட்டு யானை ஒன்று நடத்திய தாக்குதலில் தற்காலிக வீடு ஒன்று முற்றிலும் சேதமடைந்துள்ளது. இந்த அனர்த்தத்தின் போது வீட்டிலிருந்த ஒரு குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

ஞாயிறு இரவு மருதன்குடா குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை, அங்கிருந்த தற்காலிக குடிசை வீடு ஒன்றைத் தாக்கித் தரைமட்டமாக்கியது. அந்த நேரத்தில் வீட்டிற்குள் தங்கியிருந்த கர்ப்பிணித் தாய், அவரது இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவர் ஆகியோர் யானையின் தாக்குதலைக் கண்டு துரிதமாகச் செயற்பட்டதால் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினர்.
யானையின் தாக்குதலினால் அவர்களது வாழ்வாதாரப் பொருட்கள் மற்றும் தற்காலிகக் குடியிருப்பு முற்றிலும் அழிவடைந்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தினால் அப்பகுதி மக்கள் பெரும் பீதிக்குள்ளாகியுள்ளனர்.
இப்பகுதியில் நீண்டகாலமாக யானைத் தொல்லை காணப்படுவதாகவும், முறையான யானை வேலி பராமரிப்பு இன்மையே இவ்வாறான தொடர்ச்சியான அனர்த்தங்களுக்குக் காரணம் எனவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் மருதன்குடா மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எஸ்.கீதபொன்கலன்
4 minute ago
2 hours ago
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago
16 May 2026
16 May 2026