Princiya Dixci / 2022 மார்ச் 16 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்
சுவிட்சர்லாந்து, பேர்ன் மாவட்டம், மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணி மையத்தால், திருகோணமலையில் 100 குடும்பங்களுக்கு பயன்தரு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வு, அறப்பணி மையத்தின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர் ஆசிரியர் சக்தி திருச்செந்தூரன் தலைமையில் நடைபெற்றது.
அறப்பணி மையத்தின் நிறுவுநர் சக்தி சுவிஸ் சுரேஷ் சகோதரரின் பிறந்த தினத்தை முன்னிட்டு, இம்மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
திருகோணமலையின் அன்புவழிபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இவ்வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, இன்று (16) நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து விபுலானந்தா கல்லூரியில் ஒரு தொகுதி மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதுடன், அன்புவழிபுரம், செல்வநாயகபுரம், உதயபுரி பிரதேசங்களில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு பயன்தரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
புவி வெப்பமாதலைத் தடுத்தல் மற்றும் உயிர்வாயு ஒட்சிசனின் பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், இம்மரக்கன்றுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

9 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
04 Nov 2025