Editorial / 2020 ஏப்ரல் 15 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நன்மை கருதி, மாதிரி வினாப்பத்திரங்களை, மாணவர்களின் வீடுகளுக்கேக் கொண்டு சென்று விநியோகிக்கும் நடவடிக்கை, திருகோணமலை பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
திருகோணமலை அன்புவழிபுரம் கலைமகள் மகா வித்தியாலயத்தில், இம்முறை தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு, வீடுகளுக்குச் சென்று, வினாப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்படுகின்றன.
அப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம், இச்செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது.
இம் முயற்சி மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .