2025 மே 05, திங்கட்கிழமை

’மீள்குடியேற்றப் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம்’

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம்

மீள்குடியேற்றப் பாடசாலைகளில் நிலவும் கட்டட வசதிகள் உள்ளிட்ட பௌதீகக் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, கல்வியமைச்சும் மீள்குடியேற்ற அமைச்சும் இணைந்து, அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்பிக்கவுள்ளனவென, கல்வியமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

துரித கிராம வசந்தம் 2020 திட்டத்தின் மூலம், சீனக்குடா தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்படுள்ள பார்வையாளர் அரங்குக்கான அடிக்கல்நடும் நிகழ்வில், நேற்று (20) கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “யுத்தத்தால் பாதிப்படைந்த மீள்குடியேற்றக் கிராமங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில், பௌதீக வளப் பற்றாக்குறை பாரியளவில் காணப்படுகிறது. இதை நிவர்த்தி செய்யும் பொருட்டு, மீள்குடியேற்ற அமைச்சுடன் இணைந்து, அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைச் சமர்பிக்கவுள்ளோம்.

“இவ்வாறாக வளப்பற்றாக்குறை நிலவும் பாடசாலை தொடர்பான தரவுகளை, வலய கல்வி அலுவலகம், மாகாணக் கல்வியமைச்சு, மாவட்ட செயலகங்களின் மூலம் பெற்று, அதை அடிப்படையாகக்கொண்டு, அப்பாடசாலைகளுக்கான பௌதீக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன” என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X