Editorial / 2020 ஏப்ரல் 03 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மூன்று ஹொட்டல்களில் 08 வெளிநாட்டவர்கள் சுய தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகளாக வருகை தந்துள்ள மேற்படி வெளிநாட்டவர்கள், கொரோனா தொற்று இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலே, அவர்கள் தங்கிருந்த ஹொட்டல்களிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனரென, உப்புவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குறித்த வெளிநாட்டவர்களை ஒவ்வொரு நாளும் மேற்பார்வை செய்து கண்காணித்து வருவதாகவும் ஹொட்டல்களில் கொரோனா தொற்று அபாயம் தொடர்பாக பொலிஸ் அறிவுறுத்தல்கள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .