Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதிரவன்
திருகோணமலை மைதானங்களில் குழு விளையாட்டுகளில், இன்று (28) மாலை ஈடுபட்ட இளைஞர்கள், விசேட அதிரடிப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு எச்சரிக்கப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர்களும் அடங்குகின்றனர்.
முற்றவெளி, மெக்கெய்சர், கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானங்களில் கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்தாட்டம் விளையாடிய நூற்றுக்கணக்கானோர் எச்சரிக்கபட்டனர்.
“ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது, அத்தியாவசியப் பொருள்களை கொள்வனவு செய்வதற்கும் அவசர தேவைகளுக்குமே தவிர, குழுவாகச் செயற்படுவதற்கு அல்ல. உடற்பயிற்சி தேவைதான். அதைத் தனியாக செயற்படுத்த முடியும்” என, அதிரடிப்படையினர், இளைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அதேவேளை, விளையாட்டு உபகரணங்களை மீள எடுத்துச்செல்ல மறுத்த படையினர், இளைஞர்களின் வேண்டுகோளின் பின்னர் அவற்றை அனுமதித்துள்ளனர்.
6 hours ago
8 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 Sep 2025