Freelancer / 2022 மார்ச் 18 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை - கந்தளாய், போட்டன்காடு சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் வான் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் கந்தளாய் போட்டன்காடு சந்தியில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடத்திலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025