2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

விடுதலை புலிகளின் ஆவணங்கள் மீட்பு

Editorial   / 2022 மார்ச் 10 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை - ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகிதத்துக்கிடமான ஆவணங்கள் சில, நேற்று (09) மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இப்புத்தகங்கள், விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதில் விடுதலைப் புலிகளால் பாவிக்கப்பட்ட பற்றுச்சீட்டுக்கள், நிர்வாகம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் புத்தகங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

காணி உரிமையாளர், நிலக்கடலை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக நிலத்தை பன்படுத்திக் கொண்டிருந்தபோது இந்த ஆவணங்கள் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து, ஈச்சிலம்பற்று பொலிஸாருக்கு காணி உரிமையாளர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது  தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X