2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வௌிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து பண மோசடி

Freelancer   / 2022 நவம்பர் 12 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌிநாட்டில் வேலைவாய்பை பெற்றுத்தருவதாக தெரிவித்து 77 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நிலாவௌியை சேர்ந்த 33 வயதான ஒருவரே இதில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்கேநபர் இன்று திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், திருகோணமலை விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறான மோசடி நடவடிக்கைகளில் சிக்கியிருப்பின், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.  R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .