2025 மே 15, வியாழக்கிழமை

வைத்தியசாலையை மீள் திறக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

Yuganthini   / 2017 மே 05 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமாா்

மூதூர்,பாட்டாளிப்புரக் கிராமத்தில், 2011ம் ஆண்டு டிசம்பர் 12ம் திகதி திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை, தற்போது இயங்காது மூடப்பட்டு கிடப்பதாக, ​ திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதியத்தின் தலைவர் க. தேவகடாசம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையின் தேவை  தொடர்பில், அவர் மேலும் குறிப்பிடுகையில்,

300 குடும்பங்களுக்கு மேல் இப்பகுதியில் வாழ்கின்றார்கள். இவர்கள் யுத்தம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு வறுமை நிலையில் வாழ்கின்றனர்.

மேலும், இம்மக்கள் மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கு 14 கிலோ மீற்றருக்கு மேல் போக்குவரத்து வசதியின்றி பயணிக்க வேண்டியுள்ளது.

இந்த பிரச்சினையில் அதிகளவு குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், விசேட தேவையுடையோர்களே அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.

ஆதலால், இவ்விடயம் தொடர்பில் உரிய நடவ​டிக்கையை விரைவாக ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக, திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதியத்தின் தலைவர் க. தேவகடாசம் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .