Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி, ஏ.எம்.ஏ.பரீத்,எப்.முபாரக்,ஒலுமுதீன் கியாஸ்
மூதூர் பெரியபாலச் சந்தியிலிருந்து மூதூர் பிரதேச செயலகச் சந்திவரையான அரபுக் கல்லூரி வீதி மற்றும் சந்தை வீதியை இணைத்துச் செல்லும் இரண்டு கிலோ மீற்றர் தூரமுடைய வீதியை புனரமைக்குமாறு கோரி இன்று திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் சுழற்சி முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2013ஆம் ஆண்டு இந்த வீதியைப் புனரமைக்கும் நோக்கில் வடிகான் வேலைகள் மாத்திரம் செய்யப்பட்டபோதிலும், புனரமைப்புப் பணி இடைநடுவில் கைவிடப்பட்டது.
இந்த வீதியின் புனரமைப்புக்காக 11 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு -திருகோணமலை வீதியை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் கலந்துரையாடினார்.
இதன்போது, இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள இந்த வீதிக்கான புனரமைப்புப் பணி தொடர்பில் போக்குவரத்து அமைச்சரின் கவனத்துக்கு தான் கொண்டுசென்று, நல்லதொரு முடிவை நாளை மறுதினம் புதன்கிழமை பெற்றுத்தருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த பொதுமக்கள், எழுத்துமூல உறுதிமொழி கிடைக்கும்வரை எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை தாம் சுழற்சி முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கொட்டிலொன்றிலிருந்து பொதுமக்கள் சுழற்சி முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


21 minute ago
41 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
41 minute ago
49 minute ago
1 hours ago