2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி படுகாயம்

Thipaan   / 2016 ஜூலை 25 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத், தீசான் அஹமட்

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில், ஐஸ்கிறீம் விற்கும் கப் ரக வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்து, முதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என, மூதூர் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (25) காலை 7.30 மணியளவில் மூதூர் தீரி சீடி சந்தியில் இருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துத் தொடர்பாக, மூதூர் போக்குவரத்துப் பொலிஸார் சம்பவம் இடத்துக்;குச் சென்று விசாரணையை மேற்கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .