Sudharshini / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை, புல்மோட்டை பகுதியில் சைக்கிளின் மீது பஸ் மோதியில், சைக்கிளில் பயணித்த புல்மோட்டை -அரபாத் நகரைச் சேர்ந்த ரசீது யாக்கூப் (51) வயது) என்ற வயோதிபர் காயமடைந்த நிலையில் இன்று (20) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை -புல்மோட்டை ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சென்றுக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான பஸ்ஸே இவ்வாறு மோதியுள்ளதெனவும் குறித்த பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேற்படிநபர், சைக்கிளில் ஓரமாக சென்று கொண்டிருந்த வேளை, வீதியின் குறுக்காக வந்த பஸ்ஸே இவ்வாறு மோதியுள்ளது. விபத்து தொடர்பாக புல்மோட்டை போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 minute ago
25 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
25 minute ago
1 hours ago