2025 மே 16, வெள்ளிக்கிழமை

விருதுக்கு விண்ணப்பம் கோரல்

Niroshini   / 2017 மார்ச் 22 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவின் ஓர் அம்சமாக, நடைபெறும் மூத்த கலைஞர்கள் வித்தகர் விருது வழங்கும் நிகழ்வுக்கு,  இலக்கியதாரர்கள், கலைஞர்கள், துறைசார் வல்லுநர்களிடையே விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

தேர்வுக்கான நிபந்தனைகளாக, 01.01.2017 அன்று 60 வயதைப் பூர்தி செய்தவராக இருத்தல் வேண்டும்; கிழக்கு மாகாணத்தில் நிரந்தர வசிப்பிடமாக கொண்டவர் அல்லது 10 வருடங்களுக்கு மேலாக கிழக்கு மாகாணத்தில் வசித்தவராக இருத்தல் வேண்டும்; 25 வருடங்களுக்கு மேல் தன் துறைசார்ந்த அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்; கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் வழங்கபட்ட ஆளுநர் விருது முதலமைச்சர் விருதுகள் பெற்றவர்கள் இதற்கு சமர்ப்பிக்க முடியாது ஆகியன வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதிக்கு முன்னர், தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ  விண்ணப்பதாரர்கள், தமது விண்ணப்பங்களை தத்தமது பிரதேச செயலக கலாசாரப் பிரிவில் கிடைக்கச் செய்யுமாறு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .