Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜனவரி 31 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்,ஏ.எம்.ஏ.பரீத்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும்; இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும் இணைந்து நடத்தும்; நடமாடும் சேவை, திருகோணமலையில் நடைபெறவுள்ளது.
திருகோணமலை நகர மண்டபத்தில் நாளை காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணிவரையும் குச்சவெளிப் பிரதேச செயலகத்தில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணிவரையும் நடமாடும் சேவை நடைபெறும்.
இதனை அடுத்து, கிண்ணியாப் பிரதேச செயலகத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல்; முற்பகல் 11 மணிவரையும் மூதூர் பிரதேச செயலகத்தில்பிற்பகல் 1 மணி முதல்; மாலை 4 மணிவரையும் நடமாடும் சேவை நடைபெறும்.
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணிவரையும் கந்தளாய் பிரதேச செயலகத்தில் பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணிவரையும் நடமாடும் சேவை நடைபெறும்
இந்த நடமாடும் சேவையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல, பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார உட்படப் பலர் பங்கேற்கவுள்ளனர்
இதன்போது, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்பான தங்களின் முறைப்பாடுகள் மற்றும் ஆலோசனைகளைப் பொதுமக்கள் முன்வைக்க முடியும். மேலும் வெளிநாடு சென்று பாதிக்கப்பட்டவர்கள், சம்பளம் வழங்காது ஏமாற்றப்பட்டவர்கள், முகவர்களினால் ஏமாற்றப்பட்டவர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு பயன் அடையுமாறு மேற்படி அமைச்சின் ஊடகப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
3 hours ago
3 hours ago