2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

விவசாயிகளுக்கு நட்டஈடு

Kogilavani   / 2017 மே 05 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்டத்தில்  வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நட்டயீடு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளதாக, கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எஸ்.புனிதகுமார் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் வரட்சியினால், 36,804 ஏக்கர் வயல் நிலங்கள்  பாதிக்கப்பட்டுள்ளதுடன் 17,827 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வயல் செய்து பசளை மானியத்தை பெற்றுககொண்டவர்கள்களுக்கு முதற்கட்டமாக நட்டயீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு விவசாயிகளுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் வரட்சியால் பாதிக்கப்பட்ட ட விவசாயிகளுக்கு இரண்டாம் கட்டமாக, நட்டயீடு வழங்கப்படவுள்ளதாகவும் விவசாயிகளின் சரியான தரவுகள் கிடைக்காமையினால், தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த உதவி ஆணையாளர் எஸ்.புனிதகுமார்,  தங்களது சங்கங்களின் ஊடாக சரியான தரவுகளை கூடிய விரைவில் திருகோணமலை மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்துக்கு ஒப்படைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .