Freelancer / 2022 ஒக்டோபர் 22 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
வடக்குகிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வினை பெற்றுத்தருமாறு வழியுறுத்தி "100 நாள் செயல்முனைவு" எனும் தொணிப் பொருளின் கீழ் வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் கவனயீர்ப்பு போராட்டத்தின் 83வது நாளான இன்று சனிக்கிழமை மூதூர் - ஸ்ரீநாராயணபுரத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்குகிழக்கு ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பில் பெண்கள் அமைப்பினர், சிவில் செயற்பாட்டாளர்கள் என சுமார் 200 பேர் அளவில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர் வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும், எமது நிலம் எமக்கு வேண்டும், பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும்,சிவில் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தாதே உள்ளிட்ட வாசகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. (R)
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago