Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Princiya Dixci / 2017 மே 18 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை, தோப்பூர் செல்வநகர் நீணாக்கேணி பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைக் கவனத்தில் கொண்டு, இன்று (18) காலை 7.30 மணிக்கு, கிழக்கு முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர் மற்றும் ஜே.எம்.லாஹீர் உள்ளிட்ட இக்குழுவினர், அங்குள்ள மக்கள், இனந்தெரியாத இனவாதக் குழுவினரால் புதன்கிழமை அச்சுறுத்தட்ட விடயம் தொடர்பில் கேட்டறிந்துகொண்டனர்.
செல்வ நகர், மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், மேற்படி சம்பவம் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடினர்.
தமது உடைமைகள் சேதமாக்கப்பட்ட விடயத்தையும் இந்தக் பயங்கரவாதப் போக்குத் தொடருமானால் இந்த பிரதேசத்தில் பூர்வீகமாக வாழுகின்ற முஸ்லிம்களுக்குத் தொடர்ந்தும் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் அங்குள்ள மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
இப்பிரச்சினை தொடர்பிலான விரிவான அறிக்கை அமைச்சர் ஹக்கீமுக்கு வழங்கப்படுவதோடு, இதற்கான நிரந்தரத் தீர்வை, அரச உயர்மட்டத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர், 100,000 ரூபாயை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஊடாக பள்ளி நிர்வாகத்திடம் கையளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago